சிவபெருமான் குறித்து தவறான விமர்சனம்! கண்டிக்க இயலவில்லையா? தி.மு.க மீது பா.ஜ.க விமர்சனம்!

Update: 2022-04-30 13:24 GMT

சிவ பெருமான் பற்றி மிகவும் தரக்குறைவான விமர்சனத்தை யூடியூப் சேனல் மூலமாக வைப்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க., செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மைனர் விஜய் என்பவர் யூ டூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகின்றார். அவர் இந்து கடவுள்களை பற்றி மிகவும் தவறாக விமர்சனம் செய்து வருகின்றார். அதே போன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடராஜர் காலை தூக்கி நிற்க இதுதான் காரணம்! என்று மிகவும் அருவருப்பான தலைப்பில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் தில்லை நடராஜரின் தோற்றம் பற்றி தவறான தகவல்களை அளித்திருந்தார். இந்த சேனல் மீது இந்துக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மைனர் விஜய் நடத்தி வரும் யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவரது கருத்துக்கு தமிழக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சிவ பெருமான் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை செய்த ஒரு தரங்கெட்ட பதர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கூட வியப்பளிக்கவில்லை. ஆனால், அந்த அயோக்கியனை கண்டிப்பதற்கு பாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு கூட துப்பில்லாதது தான் கேவலம். அரசியல் என்கிற தொழிலை பாதுகாக்க அரசியல் தலைவர்களின் மௌனம் வெட்கக்கேடு .

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அந்த கொடியவனை கைது செய்ய காவல்துறை தயங்குவதேன்? இது தான் பேச்சுரிமை என்றால், இனி யார் வேண்டுமானாலும் எந்த கடவுள் குறித்தும் தரம்தாழ்ந்து பேசும் முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உருவாகும். எனவே தமிழக முதலமைச்சர் தன் கடமையை செய்ய வேண்டும். அவர்கள் இது போன்ற களவாணிகளை, புறம்போக்குகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News