பல ஆண்டுகளாக புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்.. காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி.!

பல ஆண்டுகளாக புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்.. காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி.!

Update: 2020-12-26 18:12 GMT

‘‘புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது ஏன்?’’ என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

நாராயணசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாகவே புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றது.

இந்நிலையில், டெல்லியில் இருந்தபடி இன்று காணொலி வாயிலாக ஜம்மு காஷ்மீரில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் புதுச்சேரியில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து பாஜகவுக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News