எங்கள் கூட்டத்தில் ஒமைக்ரான் பரவும், உதயநிதி பங்கேற்ற கூட்டத்தில் பரவாதா? தி.மு.க. அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!

நாங்கள் ஒன்றுகூடி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் என்று தடை போட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தை பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2021-12-27 10:22 GMT
எங்கள் கூட்டத்தில் ஒமைக்ரான் பரவும், உதயநிதி பங்கேற்ற கூட்டத்தில் பரவாதா? தி.மு.க. அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!

நாங்கள் ஒன்றுகூடி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் என்று தடை போட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தை பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நாங்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் என்று தடை போட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமைக்ரான் பரவும் என்று திமுக அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களா? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது: மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று மற்றொன்று பதிவில், கோவை திமுக நிகழ்ச்சியில் நடந்த கொரோனா விதிமீறல் குறித்த அமைச்சரின் விளக்கம்: முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாமா? என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy:The Hindu

Tags:    

Similar News