ரஜினியின் கட்சி பெயர் மற்றும் சின்னம் அறிவிப்பா.?
ரஜினியின் கட்சி பெயர் மற்றும் சின்னம் அறிவிப்பா.?
திரு.ரஜினிகாந்த் அவர்களின் புதிய கட்சி அறிவிப்புக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதர கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகள் முடுக்கியுட்டுள்ளன. திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சி பற்றிய அறிவிப்பை வரும் டிசம்பர் 31'ம் தேதியன்று அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் கட்சியின் பெயர் "மக்கள் சேவை கட்சி" எனவும், அதன் சின்னமாக "ஆட்டோ" பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சென்ற மாதம் வரை திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சுக்கள் உலாவி வந்த நிலையில் தற்பொழுதைய சூழ்நிலையில் அவரின் கட்சி மற்றும் சின்னம் ஆகியவை பேசு பொருளாக மாறியிருப்பது தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என தெரிகிறது.