வாவ்! மதுபாட்டில் அதிகமா வித்துடீங்க! வாழ்த்துக்கள்! - டாஸ்மாக் ஊழியர்களை குடியரசு தின விழாவில் பாராட்டிய திமுக அரசு!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடிவிடுவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஊருக்கு ஊரு மேடை போட்டு கூறி வந்த

Update: 2023-01-29 01:09 GMT

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடிவிடுவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஊருக்கு ஊரு மேடை போட்டு கூறி வந்த திமுக தற்பொழுது ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆன நிலையில் டாஸ்மாக் வருமானத்தை பாராட்டி சான்று வழங்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திமுக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான பிரச்சாரத்தை பெரும் அளவில் முன்னெடுத்து வந்தது! டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கொரோனா காலங்களை டாஸ்மாக் கடைகளை ஏன் திறக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளினால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள், நிறைய இளம் விதவைகள் அதிகமாகின்றனர், இளைஞர்கள் மது பழக்கத்திற்கு சீரழிகிறார்கள் என டாஸ்மாக் கடைக்கு எதிராக நிறைய பிரச்சாரங்கள் செய்து திமுக கடுமையாக மக்கள் மத்தியில் முன்னெடுத்து வந்தது.

திமுகவின் எம்பியும், ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி டாஸ்மாக்கினால் தமிழகத்தில் இளம் விதைகள் அதிகமாகின்றனர் இந்த கொடுமையை ஏன் திறக்க வேண்டும்? திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவே இருக்காது என்றார். இப்போதைய முதல்வர் ஸ்டாலினும் கூட திமுக ஆட்சிக்கு வந்தால் 'ஒரு சொட்டு மது இருக்காது' கூட விளம்பரப்படுத்திக் கொண்டார். திமுக ஆட்சிக்கு வர இதுபோன்ற விளம்பரங்களும் காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் திமுக ஆட்சி வந்து 20 மதங்களை கடந்த நிலையில் தற்போது டாஸ்மாக் மூடுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடைகளை அதிகமாக திறக்கிறதே தவிர டாஸ்மாக் மூடுவதை பற்றி பேசவே மறுக்கிறது திமுக! எம்பி கனிமொழி இடம் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்க போனால் உடனே அவர் அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார்.

இந்த நிலையில் கரூரில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தேசியக்கொடி ஏற்றி வைத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலகங்களுக்கு கேடயமும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த விழாவில் அதிக வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறி டாஸ்மாக் ஊழியர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போதும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு அந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பில் துறைவாரியாக பாராட்டு சான்று, கேடயம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வந்தது.

மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் பொழுது மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து அதன் பிறகு துறைவாரியாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கி கௌரவித்தனர்.

கரூர் மாவட்டத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வருவாய்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட மக்களின் நன்மைகளுக்காக இயங்கும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் பரமசங்கர் வழங்கினார்.

இந்த விழாவில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டி கொடுத்ததற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர் சிவக்குமார், ஆறுமுகம், உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேருக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டி பணியை சிறப்பாக மேற்கொண்டதாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான சான்றித சமூக வலைதளத்தில் விவாத பொருளாகியுள்ளது, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்! மதுபானம் அதிகம் விற்றதற்காக அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கும் ஒரே அரசு திமுக அரசு என மக்கள் தற்பொழுது அதிருப்தியில் உள்ளனர்.

Similar News