'உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கடினமான வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டாம்' ஜம்முவில் இளைஞர்களுக்கு உறுதியளித்த பிரதமர் மோடி
Modi speach In Jammu & Kashmir;
'ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கடினமான வாழ்க்கை நீங்கள் வாழ வேண்டாம்' என பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் பேசியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது, அதனை தொடர்ந்து மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பின் முதன்முறையாக இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க ஜம்மு-காஷ்மீர் பிரதேசங்களுக்கு சென்றார்.
ஜம்மு-காஷ்மீர் சென்ற அவர் பிரதமர் மோடி 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி அங்கிருந்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையில் பிரதமர் மோடி பேசியதாவது, 'மத்திய அரசின் திட்டங்கள் தற்போது இங்கு நேரடியாக செயல்படுத்தப்படுகின்றன. அது எங்கு உள்ள கிராமங்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது எல்.பி.ஜி வசதியாக இருந்தாலும் சரி கழிவறை வசதியாக இருந்தாலும் சரி அது இங்குள்ள மக்களை நேரடியாக சென்று அடைகிறது. வரக்கூடிய 25 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கும்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'கடந்த 70 ஆண்டுகளில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலீடுகள் மட்டுமே இங்கு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் இங்கு வரத் துவங்கி உள்ளன. ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கடினமான வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டாம்' என பிரதமர் மோடி அங்குள்ள மக்களின் முன் பேசினார்.