ஆபாச யூ ட்யூப் பேச்சாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் - ஏன் நன்றிக்கடனா?
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் நேற்று யூ ட்யூபர்களை சந்தித்துள்ளார். அதில் ஆபாசமாக இணையத்தில் பேசி வலம் வரும் யூ ட்யூபர்களும் அடக்கம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் "தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழகம் விடியும்" என கோடிகளில் இறைத்து விளம்பரம் செய்ததே! இந்த விளம்பரங்கள் இல்லாவிடில் எப்படி கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்தில் இல்லையோ அதுபோல கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியடைந்திருப்பார்கள். ஆனால் கோடிகளில் பணத்தை வாரி இறைத்த காரணத்தினால் தி.மு.க'வால் வெற்றி பெற முடிந்தது. இதனைதொடர்ந்து தமிழகத்தில் யூ ட்யூப் சேனல்கள் நடத்தி வரும் சிலர் தொடர்ந்து தி.மு.க அரசு'க்கு விளம்பர தூதராக மாறி "மிரட்டிய ஸ்டாலின், அரண்ட மத்திய அரசு", "விடுமுறை எடுக்காத முதல்வர்", "சேப்பாக்கத்தை புரட்டி போட்ட புரட்சியாளர்", "தலைநிமிரும் தமிழகம்" என்றெல்லாம் தலைப்புகள் வைத்து ஒன்றுமில்லாமல் விளம்பரத்தில் இயங்கும் தி.மு.க அரசை 'இம்சை அரசன் 23'ம் புலிகேசி' படத்தில் வருவது போல் 'புஜபல பராக்கிரமசாலியாக காண்மிக்க கரை வேட்டி கட்டாத கழகத்தினர் போல் உழைத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் பா.ஜ.க போன்று தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கட்சிகளை மட்டம் தட்டி மக்களிடையே பொய்யான பிரச்சாரம் செய்யவும் மேற்கூறிய யூ ட்யூபர்கள் தவறுவதில்லை. இப்படியாக அனைத்தையும் வாடகைக்கு விடாத குறையாக பிழைப்பை நடத்தும் யூ ட்யூபர்களை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பிற்கு 'கொரோனோ சிகிச்சைக்கு நிதி திரட்டி தரும் நிகழ்வு' என பெயர் வைத்தனர். மேலும் அந்த யூ ட்யூபர் சந்திப்பில் இணையத்தில் பெண்களை அருவருப்பாகவும், கொச்சை வார்த்தைகளை சாவகாசமாக பேசி உலா வருவதையும், தாங்கள் பேசுவதை பலர் பார்க்க நேரிடுமே என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாத சிலரும் முதல்வர் ஸ்டாலினை பார்த்துள்ளனர். கொரோனோ நிதி தருகிறோம் என்ற போர்வையில் ஆபாச இணையதளவாசிகளை முதல்வர் சந்தித்து இது போன்ற யூ ட்யூபர்கள் வலம் வருவதை ஸ்டாலின் ஊக்கப்படுத்தியுள்ளார்.
இது ஏற்கனவே செயத விளம்பரத்திற்கு நன்றி கடனா? அல்லது செய்யப்போற பொய் விளம்பரத்திற்கு முன்பதிவா என்பது தெரியவில்லை!