அ.தி.மு.க. பா.ஜ.க., ஒரே அணிதான்: கனிமொழிக்கு எச்.ராஜா பதில்.!
அ.தி.மு.க. பா.ஜ.க., ஒரே அணிதான்: கனிமொழிக்கு எச்.ராஜா பதில்.!;
பாஜகவின் ‘பி’ டீம் அதிமுக என்று திமுக எம்.பி. கனிமொழி கருத்துக்கு அதிமுக,- பாஜக ஒரே அணி என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பதில் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்: வேளாண் சட்டங்கள் குறித்து தவறான கருத்துக்களை தீயசக்திகள் பரப்பி வருகின்றது.
திமுக கட்சி தற்போது பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றார். திமுக எப்போதும் இந்துக்களுக்கு எதிரியாகத்தான் உள்ளது. மேலும், பாஜகவின் ‘பி’ டீம் என்று அதிமுக என கனிமொழி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த எச்.ராஜா, அதிமுகவும், பாஜகவும் ஒரே அணியாகத்தான் செயல்படுகிறது.
சசிகலா வருகையால் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை. அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.