அ.தி.மு.க. கொடி விவகாரத்தில் சசிகலா மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.. அமைச்சர் ஜெயக்குமார்.!
அ.தி.மு.க. கொடி விவகாரத்தில் சசிகலா மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.. அமைச்சர் ஜெயக்குமார்.!
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி விடுதலை ஆனார். இதனிடையே அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு செல்லும்போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியிருந்தார்.
இந்த சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். வரும் காலங்களில் யாரும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், சசிகலா நாளை (8ம் தேதி) தமிழகம் திரும்புகிறார். அப்போது அவர் மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும்.
சசிகலாவுக்கும் அவருக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது போன்று அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள். சசிகலா குடும்ப தலையீடு இன்றி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.