அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.!

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.!;

Update: 2021-02-06 19:33 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன சசிகலா, வருகின்ற 8ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா வருகையை முன்னிட்டு அதிமுகவில் உள்ள கீழ் மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் வாழ்த்து போஸ்டர் அடித்து வருகின்றனர்.

இதனால் அதிமுகவில் சலசலப்பை உருவாக்கியது. இதனால் இன்று மாலை 5 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியது.

அதன்படி இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது சசிகலா வரும்போது மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் யாரும் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பன ஆலோசனையில் கூறப்பட்டது. மேலும், சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு தேர்தல் பிரச்சாரம் செய்வது எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் இன்று மாலை முதல் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் வெளியே ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
 

Similar News