தெரியவில்லை என்றால் நாங்கள் வந்து காத்துக்கொடுக்கிறோம்...! முதல்வருக்கு SG சூர்யா கொடுத்த தரமான பதிலடி...!
இப்படி பொய் சொல்ல உங்களுக்கே கூச்சமா இல்லையா முதல்வர்? எஸ் ஜி சூர்யாவின் தரமான பதிலடி!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்கள் ஆகின்றன ஆனால் 2021 தேர்தல் நடக்கும் சமயத்தில் திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளாக மொத்தம் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது, இந்த 505 வாக்குறுதிகள் அவ்வப்போது சில நிறைவேற்றப்பட்டாலும் பல நிறைவேற்றப்படவில்லை என்ற குறை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டுவிட்டது எனக் கூறினார். இது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, மேலும் பல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
505 வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் எப்படி முதல்வர் 99 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் என கூறலாம்? ஒருவேளை முதல்வர் பொய்க் கூறுகிறாரா? அல்லது முதல்வருக்கே தெரியவில்லையா! என்பது போன்ற பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் பாஜகவின் மாநில செயலாளர். எஸ்.ஜி சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழக முதல்வர் ஐயா திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். “தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டுள்ளது!” என நீங்கள் அறிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, மக்களை ஏமாற்றும் வேலையை முதலில் தாங்கள் நிறுத்த வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அப்பட்ட பொய்யை மக்களுக்கு வெட்டவெளிச்சமாக்க நீங்கள் அறிவித்து நிறைவேற்றப்படாத சில வாக்குறுதிகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.
- வேலையில்லா பட்டதாரிகள் குறு தொழில் தொடங்க ₹20 லட்சம் வரை கடன்
- சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும்
- பெட்ரோல் ₹5, டீசல் ₹4 குறைக்கப்படும்.
- தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 உரிமைத் தொகை
- பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு.