ஸ்டாலினின் முதல்வர் கனவை கலைக்க தமிழகம் வரும் அமித்ஷா - தப்புமா தி.மு.க?
ஸ்டாலினின் முதல்வர் கனவை கலைக்க தமிழகம் வரும் அமித்ஷா - தப்புமா தி.மு.க?
தமிழக அரசியலில் இன்று அனைத்து கட்சிகளும் விழிப்புடன் ஒவ்வொரு மணி நேரத்தையும் கண்காணிக்கிறது என்றால் அதற்கு ஒரே மத்திய காரணம் உள்துறை அமைச்சரும், அரசியல் சாணக்கியருமான அமித்ஷா'வின் தமிழகம் வருகை.
இதுவரை இந்திய அரசியல் வரலாற்றில் பிரதம மந்திரி அல்லது தேசிய கட்சி தலைவர் வருகைதான் இந்தளவிற்கு பிரதானமாக பேசப்படும். ஏன் இந்திய திருநாட்டின் ஜனாதிபதியே தமிழகம் வந்தாலும் அது அரசியல் கட்சிகளை பொருத்தவரை சம்பிரதாய நிகழ்வு மட்டுமே. மற்றபடி அரசியல் சூழலை எந்தளவிற்கும் பெருமளவு பாதிக்காது.
ஆனால் இந்திய அரசியலில் முதன் முறையாக ஒரு உள்துறை அமைச்சரின் வருகையை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் நடவடிக்கை விட தீவிரமாக கண்காணிக்கிறது என்றால் அது இன்றைய அமித்ஷா வருகையைதான்.
காரணம் இன்றைய தமிழக அரசியல் சூழலில் இரு பெரும் தலைவர்களை இழந்து தேர்தலை சந்திக்க உள்ளது, தி.மு.க'வின் தலைவர் கருணாநிதி இன்றி தவிக்கும் தி.மு.க'வின் வளர்ச்சி அமித்ஷா'வின் வருகையை புயலின் அறிவிப்பு போன்று பார்க்கிறது.
காரணம் தங்களிடம் உள்ள ஓட்டையை தி.மு.க அறியும். குடும்ப அரசியலில் சிக்குண்டு தவிக்கும் விழிபிதுங்கும் மூத்த தி.மு.க தலைவர்கள் மனநிலை, "இவ்வளவு நாள் தி.மு.க'வில் கருணாநிதி'க்காக இருந்துவிட்டோம் மிச்சமிருக்கும் வாழ்நாளை தி.மு.க'வில் கழித்துவிடலாம்" என்ற ஒரு நினைப்புதான் தி.மு.க'வின் பலமே ஆனால் அதையும் உதயநிதி அசைத்து பார்க்க துவங்கிவிட்டார்.
மூத்தவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூட இந்த 5 படங்களின் நடித்த நடிகனின் கண்ணசைவில்தான் நடக்கிறது. இந்த சூழலை சகித்துகொண்டு நிற்கும் மூத்த உடன்பிறப்புகளை எங்கே அமித்ஷா'வின் வருகை அசைத்து பார்த்துவிடுமோ என்ற தி.மு.க'வின் அச்சம்தான் காரணம்.