தி.மு.கவை வீழ்த்த போகும் கனிமொழி - உதயநிதி மோதல்!

தி.மு.கவை வீழ்த்த போகும் கனிமொழி - உதயநிதி மோதல்!

Update: 2020-12-26 14:32 GMT

இன்னும் ஐந்து மாதத்தில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பம்பரம் போல் சுழல துவங்கியுள்ளன தி.மு.க'வை தவிர. உட்கட்சி பூசல் ஒருபுறம் கட்சியின் தலைமை குடும்பத்தின் சண்டை ஒருபுறம் என உதயசூரியனை உதிக்க விடாமல் பார்த்துக்கொள்கின்றனர் உடன்பிறப்புகளும், தி.மு.க தலைமையும்.

கடந்த வாரம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், "இனி தி.மு.க'வின் பதாகைகளில் அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் எனவும் வேறு யார் படங்களும் இடம் பெற கூடாது" எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிண்ணனி காரணத்தை விசாரிக்கும் போது குடும்ப சண்டையே பிரதான காரணம் என சில முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதாவது, ஸ்டாலின் குடும்பத்தில் ஸ்டாலின் முதல்வராக விரும்புவதை விட உதயநிதியின் அரசியல் எதிர்காலத்தை நோக்கி தான் ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினட் அக்கரையில் இருப்பதாக தெரிவித்தனர். ஆகையினால்தான் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விளம்பரங்களும், தி.மு.க'வில் மற்ற மூத்த தலைவர்களையெல்லாம் முந்திக்கொண்டு பிரச்சாரத்தை உதயநிதி துவங்கிய ரகசியமும் அடங்கும்.

மேலும் உதயநிதி'யை முன்னிலைப்படுத்துவதற்கு தடையாக இருப்பது கருணாநிதியின் மகளும் தி.மு.க மகளிரணி தலைவியுமாகிய கனிமொழி'தான் என ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினட் நினைக்கின்றனர். இதனை உறுதிபடுத்தும் வகையில் கனிமொழி'க்கு கட்சியை மட்டும் விரும்பும் உடன்பிறப்புகள் மத்தியில் அதிக முக்கியத்துவம் இருப்பதும், உதயநிதிக்கு கட்சியினரிடையே அதிக வரவேற்பு இல்லாத சம்பவங்களுமே காரணம்.

இதனை கருத்தில் கொண்டே ஸ்டாலின் "கட்சி பதாகைகளில் வேறு யார் படங்களும் இடம்பெற கூடாது" என்ற அறிவிப்பு வெளிவந்ததாக தெரிவிக்கின்றனர் அறிவாலய வட்டாரங்கள். 

ஒருபுறம் இவ்வாறு இருக்கையில் மறுபுறம் கனிமொழி தரப்போ ரொம்பவே கோபத்தில் இருக்கின்றனராம். காரணம் ஏற்கனவே ஸ்டாலினின் உடன் பிறந்த அண்ணன் மு.க.அழகிரியை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்ததை போல் கனிமொழியையும் ஒதுக்கி வைக்க நடக்கும் வைபவங்கள்தான்.

இதனை கருத்தில் கொண்ட கனிமொழி தரப்பு "கட்சியை காப்பாத்த வேண்டும் என்றால் உதயநிதியை ஒதுக்க வேண்டும்" என்ற முழக்கத்தை உடன்பிறப்புகள் மத்தியில் விதைக்க வேண்டும் என களத்தில் இறங்கியுள்ளதாம். இதன் விளைவாகவே கட்சியில் அதிருப்தியில் இருக்கும் சீனியர்களையும், ஸ்டாலின் குடும்பத்தின் மேல் வெறுப்பில் இருக்கும் உடன்பிறப்புகளையும் ஒருங்கிணைக்கும் வேளையில் இறங்கியுள்ளதாம்.

இதன் ஒரு விளைவாகவே கனிமொழியின் ஆதரவாளர் என சமூக ஊடகங்களில் அறியப்படும் ஒருவர் தற்பொழுது சமூக வலைதளங்களில் "உதயநிதி கட்சிக்கு ஆபத்து" என்கிற ரீதியில் கருத்துக்களை பரப்பும் வேளையை துவங்கியுள்ளதாகவும், இதனால் உடன்பிறப்புகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த முயல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் முன்னேற்றத்தை மட்டுமே நினைத்து காலம் காலமாக உழைத்து வரும் உடன்பிறப்புகளோ "தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இப்படி நடக்குமா?" என்கிற ரீதியில் புலம்பிவருகின்றனர். மேலும் சிலரோ வரும் தேர்தலில் தி.மு.க'வின் உட்கட்சி மோதலால் தி.மு.க'வை சார்ந்தவர்களே வெற்றிக்கு  குழிபறித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என ஆருடம் கூறி  வருகின்றனர்.

Similar News