அண்ணாமலை போட்டோவுடன் நடுரோட்டில் ஆடு வெட்டி பலி.. தி.மு.கவினரின் மறைமுக கொலை மிரட்டலா?

Update: 2024-06-06 11:09 GMT

ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்புக்கும் எதிர்பாராத பல முடிவுகள் இருந்தன. பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை அவர்கள், கோவை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். அண்ணாமலை தோற்கடிக்கப் பட்டதால், 'மட்டன் பிரியாணி' தயாரிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்தனர்.


இதனால் கோவையில் திமுக வெற்றியை கொண்டாடும் வகையில் மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டு திமுகவினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மாநகர மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் காந்திபுரத்தில் அண்ணாசிலை முன்பு திரண்ட திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


அண்ணாமலை படம் ஒட்டி ஆட்டின் தலையை துண்டித்த திமுகவினர்:

ஜூன் 4ஆம் தேதி கோவையில் திமுகவினர் அண்ணாமலைப் படம் ஒட்டிய ஆட்டை ஏந்தி வெற்றிப் பேரணி நடத்தினர். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் திமுகவினர் செய்த விஷயம் தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவினர் தங்களுடைய வெற்றி கொண்டாட்டங்களின் போது மட்டன் பிரியாணி வழங்குவதற்காக ஆடுகளை கொண்டு வந்தார்கள். திடீரென்று நடுரோட்டில் அண்ணாமலை படம் ஒட்டப்பட்ட ஆட்டின் தலையை துண்டிக்கும் அளவுக்கு திமுகவினர் துணிந்தவர்கள் சனாதன தர்மத்தின் மீதும், இந்துக்கள் மீதும் அவர்களுக்குள்ள வெறுப்பு, ஆட்டின் தலையை துண்டித்தது மட்டுமின்றி, இது மறைமுகமான கொலை மிரட்டல் ஆக இருப்பதாகவும் பாஜக திறப்பு தொண்டர்கள் முதல் பல்வேறு தலைவர்கள் வரை அவர்களுடைய தரப்பில் இருந்து கூறப்பட்டு இருக்கிறது.



பா.ஜ.க தலைவர் ஆடு வளர்க்கும் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், கே.அண்ணாமலையை இழிவுபடுத்தும் குறிப்பாக திமுக 'ஆடு' என்ற பெயர்களை பெரும்பான்மையாக பயன் படுத்துகிறார்கள். முன்னதாக, சில ஆடுகளைத் தவிர, தனக்கு எந்த சொத்தும் இல்லை என்று அண்ணாமலை ஊடகங்கள் முன்பு கூறியிருந்தார். ஏற்கனவே நேர்காணலின்போது அண்ணாமலை அவர்கள் ஆடு என்று தன்னை திமுக அழைப்பது குறித்து விளக்கம் அளித்து இருப்பார். அதில் அவர் கூறும் பொழுது, "திமுகவினர் தன்னை ஆடு என்று தொடர்ந்து கேலி செய்ததற்கு பதிலளித்த அண்ணாமலை, தனது குடும்பம் ஆடு வளர்த்து வருவதாகவும், தனது பெற்றோர் ஆடு விற்று தான் வளர்த்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

அதனால் ஆடுகளுடன் ஒப்பிடப்படுவதில் அவருக்கு எந்த அவமானமும் இல்லை" எனக் கூறியிருப்பார். தி.மு.கவினர் ஆடு என்று அழைப்பதற்கு நான் வருத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் ஆட்டை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு செயல் ஆகும். அவ்வளவு வெறுப்பு அவர்கள் என் மீது வைத்திருந்தால், நேரடியாக என்னை வந்து தொடட்டும் என்று சமீபத்திய ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.


இது குறித்து சமூக வலைத்தளங்களில் பாஜக அண்ணாமலை ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது, "பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அண்ணன் போட்டோவுடன் நடுரோட்டில் ஆட்டை வெட்டி இருப்பது மறைமுகமான கொலை மிரட்டலுக்கு அடித்தளம். மேலும் இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்? இதுவரை என்ன வழக்கு பதிவு செய்துள்ளீர்கள்? வெறும் விசாரணை மட்டும் தானா?" என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். 

Input & Image courtesy:Organiser News


Tags:    

Similar News