பழனியில் 28ம் தேதி முதல் ரோப்கார் சேவை தொடங்கும்.. யார்.. யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தெரியுமா?

பழனியில் 28ம் தேதி முதல் ரோப்கார் சேவை தொடங்கும்.. யார்.. யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தெரியுமா?

Update: 2020-12-26 11:56 GMT

பழனி முருகன் கோயில் வருகின்ற 28ம் தேதி முதல் ரோப்கார் சேவை தொடங்கப்பட உள்ளதாக பழனி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மலை உச்சியில் உள்ள முருகனை தரிசனம் செய்வதற்காக மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் இயங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்இழுவை ரயில் சேவை மட்டும் தொடங்கப்பட்டது. இதனையடுத்து ரோப்கார் சேவையையும் தொடங்கவேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நிர்வாகம் வருகின்ற 28ம்தேதி முதல் ரோப்கார் சேவை இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இணையதளத்தில் சாமி தரிசனத்திற்கு பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டும் ரோப்கார் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப்காரை, ரோப்கார் பாதுகாப்பு கமிட்டி குழுவினர் பரிசோதனை செய்து பாதுகாப்பு சான்று அளிக்கப்பட்ட பின்னர்தான் ரோப்கார் இயக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பழனி கோயிலில் ரோப்கார் இயக்கப்படுவது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 

Similar News