உடைந்த பொருட்களை வீட்டில் வைக்க கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.. ஏன்?

உடைந்த பொருட்களை வீட்டில் வைக்க கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.. ஏன்?

Update: 2021-02-16 19:24 GMT

ஆன்மீக உலகில் ஆற்றல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் என்று இரண்டு வகை உண்டு. நேர்மறை ஆற்றல் என்பது நம் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைய நமக்கு உறுதுணையாக இருக்கும். இது நல்ல வகையான ஆற்றல். இது ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு வலுவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பிரார்த்தனைகள், தியானம் போன்றவற்றால் நம் உடலை சுற்றியுள்ள ஆரா வலுப்பெறுவது நேர்மறை ஆற்றலின் குறியீடாகும். அந்த வகையில் வீட்டில் செல்வ வளம் பெருக, சுபிக்‌ஷம் ஓங்க சில விதிகளை வாஸ்து சாஸ்திரம் வரையறுத்திருக்கிறது.

அதன் படி தீய ஆற்றலை வெளிபடுத்தக்கூடியது என சில பொருட்கள் சொல்லப்படுகின்றன அவை பின்வருமாறு.

போர் காட்சிகள்: புராண, இதிகாச காட்சிகளை வீட்டில் வைக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. ஆனால் இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசத்தில் இடம்பெற்ற போர் காட்சிகளை வைக்க கூடாது. அது குடும்ப அமைதியை சீர்குலைத்து விடும்.

முட்கள் நிறைந்த செடி:

ரோஜாவை தவிர இதர முட்கள் நிறைந்த செடியினை வீட்டினுள் வைக்க கூடாது.

எதிர்மறை காட்சிகள்

கலா ரசிகர் என்பதற்காக, வீட்டில் எதிர்மறை காட்சிகளை படமாகவோ, சிலையாகவோ வைக்க கூடாது. உதாரணமாக, கனி காய்க்காத மரம், மூழ்கும் கப்பல், வேட்டையாடும் காட்சி, கூர்மையான வேள், வாள், விலங்கோ மனிதர்களோ அழுவதை போன்ற படங்கள் வைப்பது பொருளாதாரத்தை, வீட்டின் அமைதியை குறைக்கும்.

பன்னி, பாம்பு, கழுகு, ஆந்தை, காகம் போன்ற பறவைகளின் உருவத்தை, படத்தை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பெரும் ஆஜானுபாகுவான உருவங்களையும் தவிர்க்க வேண்டும். ஆக்ரோஷமான புலி உருவம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

மிக முக்கியமாக வீட்டில் உடைந்த பொருட்களை வைக்க கூடாது. உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி, உடைந்த சிலைகள், உடைந்த கடவுள் சிற்பங்கள் ஆகியவற்றை வைப்பது வீட்டின் நன்மைக்கு ஏதுவானது அல்ல.

இவற்றை எல்லாம் மூட நம்பிக்கை என ஒதுக்கி விட முடியாது. நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்தே வகுத்திருக்கிறார்கள்.

Similar News