கிரஹபிரவேஷத்தின் போந்து ஹோம குண்டம் வளர்ப்பதால் நிகழும் அதிசய நன்மைகள் என்ன?

கிரஹபிரவேஷத்தின் போந்து ஹோம குண்டம் வளர்ப்பதால் நிகழும் அதிசய நன்மைகள் என்ன?

Update: 2021-02-15 07:42 GMT

மாசி பிறந்து விட்டது. மாதம் முழுவ்வதும் முகூர்த்தங்கள் தான். திருமணம் தொடங்கி, காது குத்து, வளைகாப்பு என நீளும் பட்டியலில் மிக அதிகமாக நிகழும் விஷேசம் என்றால் புது மனை புகுவிழாவான கிரகபிரவேஷத்தையும் சொல்லலாம். கிரக பிரவேஷம் என்கிற வைபவம் எதனால் உருவானது? அதன் தாத்பரியங்கள் என்ன? ஒரு வீட்டை தேர்வு செய்யும் போதே, அந்த வீடு அமையவிருக்கும் திசை, அறைகளின் அளவு ஆகியவை வாஸ்து படி இருக்கிறதா என நாம் ஆராய்ந்து ஒரு வீட்டை கட்டுகிறோம்

.

அந்த வாஸ்து சாஸ்திரத்தின் படி கிரக பிரவேசம் என்பது, வீட்டிற்குள் வாழ அல்லது முறைப்படி நுழைய துவங்கும் முதல் நாளை குறிக்கிறது. கிரஹம் என்றால் வீடு, பிரவேஷம் என்பது நுழைதல் என்பது முறையே பொருள் படும். இது புதுமனையின் திறப்பு விழாவின் போது புனித நாளாக கருதப்படுகிறது.

இந்த கிரஹபிரவேச நாளில் கணபதி ஹோமம் நிகழ்த்துவது வழக்கம். இதற்காக முறையான ஆருடர்களை செய்வார்கள். அவர்கள் வீட்டினுள் வரையும் மண்டலமானது, கடவுள்களை அந்த வீட்டினுள் ஈர்க்கவும், ஒன்பது கிரகங்களின் அனுகிரங்களை ஈர்க்கவும் உதவுகிறது. இவர்களின் அருளும், ஆசியும் வீட்டிற்குள் நுழைந்து அவர்களே இந்த விழாவின் நாயகர்களாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

கிரகபிரவேஷத்தன்று வளர்க்கப்படும் ஹோமம், மருத்துவ குணங்கள் வாய்ந்த் மூலிகைகள் அஹூதியாக அளிக்கப்படுகிறது. அதன் பொருள், ஒரு பொருளை அக்னிக்குள் அர்பணிக்கும் போது, நாம் அர்பணிக்கிற அனைத்தும் தெய்வீகத்திடமிருந்து பெற்றது, அவை தெய்வத்திற்கே அர்பணிக்கப்படுகிறது என்று பொருள்படும் படி அமைக்கப்பட்டது. மேலும் அந்த மூலிகைகள் உருவாக்கும் புகை மண்டலத்தை அந்த ஹோமத்தில் கலந்து கொள்பவர்கள் சுவாசிக்கிற போது, அவர்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் இருக்கும் அசுத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

சாஸ்திரத்தில் மூன்று வகையான கிரகபிரவேஷங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, அபூர்வா, சபூர்வா மற்றும் துவாந்த்வா. இதில் அபூர்வா என்பது, புதிதாக தேர்வு செய்த நிலத்தில் உருவான வீட்டில் முதன் முறையாக நுழைதல்.

அடுத்து வெளிநாடுகளில் வசித்து அல்லது வெளியூர் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக வீட்டை விட்டு பிரிந்திருந்து மீண்டும் வாழ்ந்த வீட்டிலேயே குடியேறுகிற போது செய்யப்படுவது சபூர்வா எனப்படுகிறது.

வெள்ளம், நீர், நெருப்பு, மின்சாரம்  போன்ற மற்றும் சில காரணங்களால் பாதிக்கப்பட்ட வீட்டை மீட்டுருவாக்கி செய்யப்படும் பூஜை துவாந்த்வ என அழைக்கப்படுகிறது.

Similar News