எலும்பிச்சை மற்றும் மிளகாயை வாயிலில் கட்டுவது ஏன்? ஆச்சர்ய தகவல்.!

எலும்பிச்சை மற்றும் மிளகாயை வாயிலில் கட்டுவது ஏன்? ஆச்சர்ய தகவல்.!

Update: 2020-11-13 05:30 GMT

நாம் அனைவரும் பல வீடுகள், அலுவலகங்கள், வியாபார இடங்களில் எலும்பிச்சை, மிளகாய் மற்றும் கரியை இணைத்து கட்டியிருப்பதை பார்த்திருப்போம். பொதுவாக சொன்னால் கண் திருஷ்டி, கண் படுதல் ஆகியவைகளிலிருந்து அந்த இடத்தை  பாதுகாக்க இது போன்ற செயல்கள் செய்யப்படுகின்றன. இந்த பழக்க வழக்கம் நமக்கு பல தலைமுறைகளாக கடத்தப்பட்டு  இன்றும் நம்மிடைய பழக்கத்தில் உண்டு.

ஏழு மிளகாய் மற்றும் எலும்பிச்சையை ஒரு கயிறு அல்லது உலோகத்தில் கோர்த்து வீடுகளில் மாட்டுவார்கள். இதற்கு முன்பு கட்டியிருந்த கயிற்றை கழற்றி சாலைகள் இணையும் இடத்தில் போடுவது வழக்கம். இந்த திருஷ்டி படிந்த கயிற்றை யாரேனும் மிதித்து விட்டால் அவர்கள் பல எதிர்மறை அதிர்வுகளை பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

எலும்பிச்சை மற்றும் மிளகாயை ஏன்  வீட்டின் முன் கட்டுகிறார்கள் என்று நாம் மக்களிடம் கேட்டால், பலரும் அதிர்ஷ்டமற்ற தேவதையின் கதையை சொல்வார்கள். லக்‌ஷ்மிக்கு எதிர்பதமான அவலக்‌ஷமி தேவதை  வறுமை மற்றும் எதிர்மறை ஆற்றலின் அடையாளமாக இருக்கிறார். இவருக்கு புளிப்பு, சூடு, மற்றும் நறுமணமற்ற பொருட்கள் தான் விருப்பமாம். எனவே வீட்டின் வாசலில் மிளகாய் மற்றும் எலும்பிச்சையை கட்டுகிற போது, அந்த தேவதை அதன் பால் ஈர்க்கப்பட்டு வீடுகளுக்குள் செல்லமாட்டர். இந்த பாதுகாப்பு அரணுடனே உரைந்துவிடுவார் என்பது நம்பிக்கை.

ஆனால் இதற்கு பின் சொல்லப்படும் அறிவியல் காரணம் யாதெனில், முன்னரெல்லாம் பெரும் நவீனமும், மருத்துவமும் வளராத காலத்தில். வீடுகள் மிகவும் நெருக்கமாக இருக்காத சூழலில் மிகவும் அதிகமான பூச்சிகள்  வீட்டினுள் வந்த வண்ணம் இருந்துள்ளன.

எனவே இதனை தடுப்பதற்கு அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பூச்சி கொல்லி தான் எலும்பிச்சையும் பச்சை மிளகாயும் என்று சொல்கின்றனர். இன்று கூட ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் செடிகளுக்கு பூச்சிகள் இருப்பின் மிளகாயை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால் கன ரக வாகனங்களில் இதனை கட்டியிருப்பதை காண முடியும். இதற்கான காரணம் முந்தைய காலத்தில் பெரும் தூரம் பயணிக்கும் போது  போதிய மருத்துவ வசதியிருக்கவில்லை. பாம்பு அல்லது விஷ பூச்சிகள் தீண்டினால். விஷம் உடலில் ஏறியுள்ளதா இல்லையா என்பதை புளிப்பு மற்றும் காரம் சுவையை ருசித்து பார்ப்பதன் மூலம் அறிய முடியுமாம். உடலில் விஷம் ஏறியிருந்தால் சுவை தெரியாது என்றும், உடலில் விஷம் ஏறவில்லை என்றால் சுவை தெரியும் என்பதும் நம்பிக்கை.

Similar News