கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் அரசியல் நடத்த பந்த் அறிவித்தது ஜனநாயக விரோதமானது - இந்து வியாபாரிகள் நல சங்கம் பதிலடி!
மத்திய அரசை எதிர்த்து இன்று (செப்டம்பர் 27) தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பந்த் அறிவித்துள்ளனர். இதில் இந்து வியாபாரிகள் நல சங்கம் பங்கேற்காது என்று அதன் மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
மத்திய அரசை எதிர்த்து இன்று (செப்டம்பர் 27) தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பந்த் அறிவித்துள்ளனர். இதில் இந்து வியாபாரிகள் நல சங்கம் பங்கேற்காது என்று அதன் மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ள பந்தில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்து கொள்ளாது. வழக்கம் போல் கடைகள் திறந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் இன்று (செப்டம்பர் 27ம் தேதி) அறிவித்துள்ள பந்த் மக்கள் விரோதமானது. இதனை காரணம் காட்டி வியாபாரிகள் சங்கம் சில கடைகளை அடைக்க கூறி வற்புறுத்துவதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறை மக்களை அச்சுறுத்தி செய்யும் இது போன்ற கடையடைப்பை தடுக்க வேண்டும். இது ஜனநாயக விரோதமானது. இந்த கடையடைப்பில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்து கொள்ளாது. எங்கள் சங்கத்தின் கடைகள் வழக்கமாக திறந்து வியாபாரம் நடைபெறும். கொரோனா ஊரடங்கால் ஒட்டுமொத்த உலகமே முடங்கி அல்லல் பட்டது.
இந்நிலையில் போர்கால அடிப்படையில் தடுப்பூசி போட்டு, நோய் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக அனுப்பி வருகிறது.
இதே தடுப்பூசிக்கு எதிராகவும், மக்களை குழப்பும் வகையிலும் கருத்துக்களைக் கூறியது கம்யூனிச, திராவிட அமைப்புகள் தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே, முதலிலேயே மத்திய அரசுடன் ஒத்துழைத்திருந்தால் இன்னும் சில மாதங்களுக்கு முன்னரே கூட நோய் தொற்று குறைந்து, மாநிலம் சகஜ நிலைக்கு திரும்பியிருக்கும்.