தற்போதைய சூழலில் ஈஷா மையம் பற்றிய ஆர்.டி.ஐ. மூலம் வெளிவந்திருக்கும் உண்மைகளை விட கனமானது. ''இவர்கள் எல்லாம் சொன்னால் சரியாகதான் இருக்கும் என்ற நம்பிக்கை உடைந்து போய் உள்ளதுதான். இதுநாள் வரைக்கும் ஒரு அமைப்பின் மீதான இவர்களின் தனிப்பட்ட வெறுப்பினை கக்கி வந்துள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்திருப்பதை அறிய முடிகிறது. இனிமேல் யாரைத்தான் நம்புவது என்ற கேள்வியும், ஆதங்கமும் பொங்கி எழும் நிலை உருவாகியுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆர்.டி.ஐ. தகவல்களை தாண்டி நாமே கொஞ்சம் துருவிப் பார்க்கும் பட்சத்தில் வெளிவருகின்ற உண்மைகள் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது இந்த போராளிகள் போர்வையில் சுற்றுகின்ற எவரையும் அப்படியே நம்பி விடக்கூடாது என்கின்ற கேள்வியும், எண்ணமும் நமது மனதில் எழுகிறது.
தற்போதைய நிலையில் ஈஷா மையம் அமைந்துள்ள இடம் பட்டா என்பது தெரிய வருகிறது. அதுவும் புறம்போக்கு நிலமாக வாங்கிய பின்னர் பெறப்படும் பட்டாவோ அல்லது கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதன் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமோ அல்ல, அவர்கள் வாங்கியதே 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் இருந்த பட்டா நிலங்கள்தான். என்ன ஒன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இதனை ஒரு விஷயத்தை மட்டம் வைத்துக் கொண்டு பல்வேறு கட்டுக்கதைகளை பரப்பிவிட்டனர்.
மேலும், வனஎல்லைக்கு மிக தொலைவில் உள்ளது ஆதியோகி சிலை. அதே போன்று ஆதியோகி சிலை அமைந்திருக்கும் பகுதி முழுமையான பட்டா நிலம் ஆகும். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் இடமானது வனத்தை ஒட்டிய பட்டா நிலம். ஆனால் ஆதியோகி சிலையானது வன நிலத்தை தள்ளி மிகவும் தொலைவில் உள்ளது.
சிலைக்கு அடுத்து சில பாக்கு தோப்புகள், சில குடியிருப்புகள் உள்ளது. அதற்கு அடுத்ததேதான் வன நிலம் துவங்குகிறது. ஆதியோகி சிலை அமைப்பதற்கும் கூட அனைத்து விதமான அனுமதியையும் வாங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக யானை செல்கின்ற வழித்தடம் என்ற அவதூறு கருத்துக்ளை பரப்பினர். அதனால் அவை யானை வழித்தடம் என்று சொல்லிவிட முடியாது. ஏதோ ஒரு முறை யானை அவ்வழியாக அதனை யானை வழித்தடம் என்று சொல்லவும் முடியாது. இது போன்ற கருத்துக்களை வனத்துறையை சார்ந்த வழக்குகளிலும் குறிப்பிட்டுள்ளது.
அப்படி பார்க்கின்றபோது ''ரைட் ஆப் பாசேஜ்'' என்ற யானைகள் வலசைப் பாதைகள் குறித்த மிக நீண்ட ஆழமான ஆய்வுகளுக்கு பின்னரே வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட ஈஷா மையம் அமைந்திருக்கும் பகுதி வரவில்லை. ஆய்விலும் வராத, யானைகளுக்கும் தெரியாத பாதையை இந்த கூட்டம் மட்டுமோ பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
இன்றைய நிலையில் இவர்களை நம்பி ஏமாந்துள்ள இந்த வெகுளி தமிழ் சமூகத்தின் சார்பில் அந்த நண்பர்களுக்கும், தோழமைகளுக்கும், சார்ந்தோர் அனைவருக்கும் சில கேள்விகளை மட்டும் முன்வைப்போம்.
அதில் முதலாவது: ஈஷா யோகா மையம் வனநிலங்களை ஆக்கிரமிக்கவில்லை என்பது தற்போதைய நிலையில் வெளிவந்திருக்கின்ற ஆர்.டி.ஐ. தகவல்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை காலமாக அவர்கள் வன நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக எங்களை எல்லாம் ஏன் பொய்யாக நம்ப வைத்தீர்கள்?
மேலும், சத்குரு ஒரு இன்ச் நிலம் ஆக்கிரமித்திருக்கின்றார் என்பதை நிரூபியுங்கள் நாட்டை விட்டே வெளியேறுகின்றேன் என்று கூறினார். இது போன்ற சவால்கள் விட்டப் பின்னரும் அதனை நிரூபிக்காமல் தொடர்ந்து பொய்களை கூற உங்களின் கூட்டத்தால் மட்டும் எப்படி முடிந்தது என்று தெரியவில்லை.
ஈஷா மையம் தற்போது அமைந்துள்ள இடம் பட்டாவில் உள்ளது என்று வரைபட ஆதாரங்களையும், நிலபுல எண்களையும் அம்மையம் பொது வெளியில் வழங்கிய பின்னரும் கூட உங்களின் பொய்கள் தொடர்ந்தது மட்டும் ஏன்?
வன எல்லையில் இருந்து வெகுதூரம் அமைந்துள்ள ஆதியோகி சிலையும் வனத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்ற பிம்பத்தை உருவாக்க முயன்றது மட்டும் ஏன்?
ஈஷா மையம் யானைகளின் வழித்தடத்தில் இல்லை என்கின்ற உண்மைகள் வெளியே தெரிந்த பின்னரும் வரையறுக்கப்படவில்லை, அங்கீகரிக்கப்படவில்லை என்ற சப்பை கட்டுகள் எதற்காக? அடுத்தவர் மீது குற்றம் சுமத்தும் முன்னர் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டாமா?
தமிழகத்தில் ஏராளமான வலசை பாதையை ஆக்கிரமித்துள்ள ரிசார்ட்டுகள், தேயிலை தோடங்கள், நிறுவனங்கள் தொடர்பாக எதிலுமே பெரிய ஆர்வம் காட்டாத தாங்கள் யானைகள் என்றாலே ஈஷா மையம் என்கின்ற பிம்பத்தை உருவாக்கவும், எங்குமே சொல்லப்படாத வலமை பாதையில் ஈஷா மையம் அமைந்திருக்கிறது என நிறுவவும் 'தனி சிறப்பு' ஆர்வம் காட்டுவது மட்டும் ஏன்?
பூவுலகின் நண்பர்கள் மட்டும் தோராயமாக 7 வழக்குகளை ஈஷா மீது தொடர்ந்துள்ளீர்கள். அதில் 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒரு வழக்கில் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரே அமைப்பின் மீது ஏன் இவ்வளவு வழக்குகள்? இது போன்று நீங்கள் வேறு அமைப்பின் மீதோ அல்லது வணிக நிறுவனத்தின் மீதோ, அரசியல் கட்சிகள், கட்சியை சார்ந்தவர்கள் மீதோ தாங்கள் வழக்கு தொடுத்துள்ளீர்களா?
யானை வலசைப் பாதைகள் பற்றிய ''ரைட் ஆப் பாசேஜ்'' என்ற ஆய்வு அறிக்கையிலோ அல்லது ''கஜா'' என்ற ஆய்வு அறிக்கையிலோ ஈஷா மையம் அமைந்திருக்கும் பகுதி வரவில்லை. உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற தேவையில்லாத கட்டமைப்பை செய்வீர்களா?
இறுதியில் பொய்களால் பூவுலகை காக்க முடியாது, நண்பர்களே!! தம்பிகளே!! தோழர்களே!! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.
Source, Image Courtesy: Isha