நெல்லை: செப்பறை திருக்கோயிலில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

நெல்லை மாவட்டம், தாழையூத்து அடுத்துள்ள இராஜவல்லிபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள செப்பறை திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று (டிசம்பர் 19) சிறப்புடன் நடைபெற்றது.

Update: 2021-12-19 11:34 GMT

நெல்லை மாவட்டம், தாழையூத்து அடுத்துள்ள இராஜவல்லிபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள செப்பறை திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று (டிசம்பர் 19) சிறப்புடன் நடைபெற்றது.

இந்த திருக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. செப்பறை திருக்கோயிலில் அழகிய கூத்தர் சிவகாமி அம்மன் தாமிரசபைகளில் ஒன்றான தென்தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த கோயில் சிதம்பர நடராஜர் கோயிலுக்கு அடுத்தபடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயில் தேரோட்டம் தீபாரதனையுடன் இன்று தொடங்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரும் வடம்பிடித்து தேரை இழுத்தனர். தேரின் முன்பகுதியில் சிவனடியார்கள் பஞ்ச வாத்தியம் முழங்க பக்தி பரவசத்தில் பக்தர்கள் அனைவரும் தேரை இழுத்தனர். 

Tags:    

Similar News