சென்னை: இடிந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களை விரட்டியடிக்கும் தி.மு.க. அரசு: எங்கே செல்வது என தெரியாமல் தவிப்பு!
சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததால் அங்கு வசித்த மக்கள் இரவு முழுவதிலும் சாலைகளிலும், பிளாட்பாரங்களிலும் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளை வல்லுநர் குழு ஆய்வு செய்ய இருப்பதால் உடமைகளுடன் வெளியேறிய மக்கள் எங்கே செல்வது என்று தவித்து வருகின்றனர்.

சென்னை, திருவொற்றியூர் அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதனால் அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு வசித்து இருந்த மக்கள் தங்களின் உடமைகளை இழந்து பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு வழங்கியிருக்கும் ஒரு லட்சம் பணத்தில் என்ன செய்வது என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், மொத்தமாக 336 வீடுகள் உள்ள நிலையில், தற்போது 18 வீடுகளின் தரத்தை வல்லுநர்கள் சேகரிக்கின்றனர். இதனால் மற்ற பிளாக்குகளிலும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக சுமார் 72 வீடுகளில் வசித்த மக்களை காலிசெய்யும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கவலையில் ஆழ்ந்த மக்கள் தங்களின் உடமைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் சாலைகளில் தவித்து வருவதை காணமுடிகிறது. உடனடியாக மாற்று வீடுகளை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: The Hindu