திருப்பூரில் பெருமாள் கோயிலை இடிக்க, தி.மு.க அரசின் வருவாய்த்துறை முயல்வதாக குற்றச்சாட்டு!

Update: 2022-01-21 11:33 GMT

திருப்பூர் மாவட்டத்தில் பெருமாள் கோயில் ஒன்றை தி.மு.க அரசின் வருவாய்த்துறை இடிக்கும் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   


தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக இந்து கோவில்கள் மற்றும் இந்து மத அடையாளங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் கோயில் அமைந்துள்ளது" என்றுக்  காரணம் கூறி முக்கிய கோவில்களை அரசு அகற்றி வருகின்றது. 

திருப்பூர் மாவட்டத்தில் செவந்தாம்பாளையம் என்ற பகுதியில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலில் அப்பகுதி மக்களும் பிற பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு சென்று வருகின்றனர். ஆனால் இக்கோயிலை  19.1.2022  அன்று  வருவாய் துறையினர் இடிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனே இச்சம்பவத்தை அறிந்த இந்து முன்னணி அமைப்பு அப்பகுதிக்குச் சென்று, மாநில பொதுச்செயலாளர் திரு கிஷோர் குமார் தலைமையில் மறியல் போராட்டத்தை அரங்கேற்றியது.

இந்து முன்னணியின் போராட்டத்தை தொடர்ந்து, கோயில் இடிப்புத்  திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது.சமீபகாலமாக தமிழகத்தில் இந்துக் கோயில்களை அகற்றம்  முயற்சிகள் நடந்தேறி வருவதும், அம் முயற்சிகளை இந்து முன்னணி அமைப்பு முறியடித்து வருவதும்  குறிப்பிடத்தக்கது.

Similar News