சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 23) கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்தது. இதனால் பலர் கோயிலுக்கு சென்று நேரடியாக கும்பாபிஷேக விழாவை பார்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிடடு கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் யாகத்தில் பங்கேற்கின்றனர். இன்று (ஜனவரி 22) சனிக்கிழமை யாகசாலை பூஜைகளுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை வீட்டில் இருந்து நேரடியாக பக்தர்கள் கண்டுகளிக்க https://www.dinamalar.com/vadapalani/i இந்த இணையதளத்தில் பார்த்து தரிசனம் செய்யலாம்.
Source, Image Courtesy: Dinamalar