விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டரில் மலர் தூவி கோலாகலம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2022-02-06 11:24 GMT

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று காலை 6 மணிக்கு யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு கலசங்களுக்கு பூர்ணாகுதி நடைபெற்றது. அதன் பின்னர் கோயிலில் உள்ள ஐந்து ராஜகோபுரங்கள் மூலவர் சன்னதிகள் உள்ளிட்ட இடங்களில் யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

பின்னர் வேத மந்திரங்களுடன் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினர். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Source, Image Courtesy: Polimer

Similar News