மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குள்ளே கனரக வாகனம்! தொடர்கதையாகி வரும் ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் போக்கு!

Update: 2022-02-26 11:57 GMT

சென்னை :  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குள்ளே கனரக வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ள செய்தி, இந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சியில் ஹிந்து மக்களின் உணர்வுகளை  அவமதிக்கும் போக்கு தொடர்கதையாகி வருகிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே உருவாக்கப்பட்ட ஆகம விதிகளின்படி, திருத்தலங்கள் நிர்வகிக்கப்பட்டு அதன் புனிதங்கள் காக்கப்பட்டு வந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொடங்கி  தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை வரை  தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்கள்  அரசின் கைக்குச் சென்றது.

அன்று முதல் இந்து கோயில்களை ஆகம விதிப்படி  நிர்வகிப்பதில்  குளறுபடிகள் இருந்து தான் வருகிறது. பல இடங்களில் கோயில்களின்  ஆகம விதிகளை கோயில் நிர்வாகம்  மதிக்காமல்  செயல்பட்டு வருகிறது.


இதன் வரிசையில், சென்னை மயிலாப்பூர்  ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்திற்குள்ளே கனரக வாகனம் ஒன்று  நிறுத்தப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வேதனை அடைந்தனர்.




 இதுதான் இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் லட்சணமா? என்று இந்து சமய அறநிலையத் துறையை நோக்கி சமூக வலைதளங்களில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Similar News