திருவாரூர் தேரோட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கிய இந்து முன்னணி!

Update: 2022-03-16 08:51 GMT
திருவாரூர் தேரோட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கிய இந்து முன்னணி!

உலக புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானத்தை இந்து முன்னணி சார்பாக வழங்கப்பட்டது.


உலக புகழ்பெற்ற தேர்த்திருவிழா திருவாரூர் விளங்குகிறது. மிகப்பெரிய தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருவர். இதனை காண்பதற்கு பல லட்சம் மக்கள் திருவாரூரில் முகாமிடுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் வெகு விமர்சையாக தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ராமகோபாலன் நினைவாக 2000 நபர்களுக்கு ரங்கதாஸ் நைனா அவர்கள் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News