எங்கள் ஜாதியில்தான் வேண்டும்: பேராயர் நியமனத்திற்கு தலித் கிறிஸ்தவ அமைப்பு கறுப்பு கொடி!

Update: 2022-03-21 05:52 GMT

புதிதாக பொறுப்பு ஏற்க உள்ள பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலத்தில் பாத்திமா அன்னை ஆலயத்தில் தலித் கிறிஸ்தவ அமைப்பினர் கறுப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கடலூர் மற்றும் புதுச்சேரி பேராயராக இருந்தவர் அந்தோணி ஆனந்தராயர். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அபீர் என்பவர் பொறுப்பு பேராயராக இருந்து வந்தார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், மீரட் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், புதுவை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு புதிய பேராயராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்திற்கு தலித் கிறிஸ்தவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதாவது புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் 75 சதவீதம் தலித் கிறிஸ்தவ மக்கள் இருப்பதால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்தான் பேராயராக நியமனம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News