தென்காசி: கோயில் நிலத்தை ஆக்கிரமித்து 'சர்ச்' நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு!

Update: 2022-03-28 06:34 GMT

தென்காசி :  குற்றாலநாதர் சுவாமி கோயில் இடத்தில் சர்ச் நடத்தப்படுவதாக இந்துமுன்னணி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.


தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக, பொது இடங்களில்  சட்டவிரோதமாக  இந்து மக்களை குறிவைத்து புதிது புதிதாய் ஜெபக்கூடங்களும் சர்ச்சுகளும் உதயமாகி வருகிறது.


அதுமட்டுமல்லாமல், இந்து கோயில் நிலங்கள் பல இடங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.


இதன் வரிசையில், தென்காசி மாவட்டத்தின் புகழ்பெற்ற குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் இடமான கடைவீதியில், ஒரு கடையை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக 'சர்ச்' நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கையில், மீண்டும் ஒரு கடையின் மேல் தளத்தில் 'சர்ச்' இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


"நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது  'சர்ச்' நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tweet


Similar News