மதுரை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கால கோயில் கண்டுப்பிடிப்பு!
மதுரை அலங்காநல்லூர் சின்ன, பெரிய இலந்தைக்குளம் அருகே கோயிலூரில் சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த பிற்கால பாண்டியர்கள் காலத்தின் கோயிலை கல்லூரி உதவி பேராசிரியர்கள் பிறையா, ராஜகோபால் உள்ளிட்டோர் கண்டுப்பிடித்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர்கள் கூறும்போது: கோயிலின் கர்ப்பகிரகம், அர்த்த, மகா மண்டபங்கள் சிதைந்து போயுள்ளது. பிற்கால கட்டட, சிற்பக் கலைகளை பார்க்கின்றபோது பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களின் பங்களிப்பு மிக அழகாக தெரிகிறது.
மேலும், கருவறையில் எவ்வித சிலையும் இல்லை, இது வைணவ தலம் என்பதற்கான சான்றுகளாகும். கோயில் நுழைவு வாயில் தூண்களில் சுமார் 4 அடி உயர கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் இருப்பதால் வைணவ தலம் என்பதை உறுதிப்படுத்த முடியும். மேலும், பராமரிப்பினறி சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் பிற்கால பாண்டியர்கள் காலத்தில கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar