"சாதிப்பாகுபாடு, பாலியல் புகார்!" பேராயர் அந்தோணிசாமி மீது கடுப்பில் கிறிஸ்தவர்கள்!

Update: 2022-04-15 12:05 GMT

"பெரிய பொறுப்புகளில் இருக்கும் நபர்களை சந்திக்க பயப்படும் வகையில், கிறிஸ்துவ பெண்களை மன உளைச்சல் மற்றும் பயத்தையும் உருவாக்கிய மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணி சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் என்ற அமைப்பு காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளது.


மதுரைமறை மாவட்ட பேராயர் அந்தோணி சாமி மீது பல குற்றச்சாட்டுகள் கிறிஸ்தவ சமுதாயத்தில் இருந்து வருகிறது. அவரால் கிறிஸ்துவ சமூகத்திற்கு மரியாதை குறைவு ஏற்படுவதாக பல கிறிஸ்தவ அமைப்புகளும், கிறிஸ்தவ மக்களும் கருதி வருகின்றனர்.


இதன் வரிசையில்,  'கிறிஸ்தவ மக்கள் களம்' என்ற அமைப்பின் தலைவர் சூசை ராஜ் கூடல்புதூர் காவல் நிலையத்தில், பேராயர் அந்தோணிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் முக்கிய அம்சமாக " பேராயர் அந்தோணிசாமி திருச்சபையில் சாதிப் பாகுபாடுகளை ஊக்குவிக்கிறார், மேலும் தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்தும் வகையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நோக்கில் பிரித்து பார்த்து செயல்பட்டு வருகிறார்.


"தலித் கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறை" என்று சாதிப் பாகுபாடுகளை தூண்டி விடுகிறார்.


பத்திரிக்கை செய்தியில், பேராயர் அந்தோணி சாமி மீது பாலியல் குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது. அதற்கு எந்த ஒரு மறுப்பும், எதிர்ப்பும் வெளிப்படுத்தாமல் அந்தோணிசாமி அமைதியாக இருப்பது அக் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வது போல் உள்ளது.


கிறிஸ்துவ சமுதாயத்திற்கு மன உளைச்சலையும், பயத்தையும் உருவாக்கி வரும் அந்தோணிசாமி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகாரில்   சூசைராஜ் பதிவு    செய்துள்ளார்.



Similar News