ரோட்டில் அடித்துக்கொண்ட பள்ளி மாணவர்கள் - எங்கே செல்கிறது தமிழக மாணவர்களின் எதிர்காலம்?

Update: 2022-04-28 07:28 GMT

கோவை: பொதுமக்கள் மத்தியில், சாலையில் இரு குழுக்களாக பிரிந்து, அரசுப் பள்ளி  மாணவர்கள் சரமாரியாக அடித்துக் கொண்ட காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக, பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள்தான் பேசுபொருள் ஆகியுள்ளது. முக்கியமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில், ஆசிரியரை பள்ளி மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே அடிக்க கை ஓங்கியச் சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளானது.


இதன் வரிசையில், கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொதுமக்கள் மத்தியில் இரு குழுக்களாக பிரிந்து கொண்டு, கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக ஒருவருக்கொருவர்  தாக்கிக் கொண்டனர். இந்த காட்சியை அவ்  வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர், தன் மொபைல் போனில் வீடியோவாக படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


"நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசு பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகளை, பள்ளிக்கல்வித்துறையை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு  கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Full View


Similar News