மீண்டும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக ரத்தினவேல் நியமனம் - பின்னணி என்ன?
மகரிஷி சரக்சபத் என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுத்த நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இவரது மாற்றத்திற்கு பா.ஜ.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் அவர் டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். அப்போது அது சமஸ்கிருதம் என்ற புரளியை மீடியாக்கள் கிளப்பி விட்டது. இதனால் மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேலை தி.மு.க. அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. மாணவர்கள் உறுதிமொழி எடுத்தது சமஸ்கிருதம் கிடையாது. அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று டீன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ‛மகரிஷி சரக்சபத்' உறுதிமொழி விவகாரம் தொடர்பாக முதல்வருக்கோ, பேராசிரியர்களுக்கோ தெரியாது என்று மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் விளக்கள் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேரில் விளக்கம் அளித்தார், அது மட்டுமின்றி கொரோனா சமயத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்று கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar