உரிமையை யாருக்காகவும் விட முடியாது - ஆதீனத்தின் பல்லக்கை தூக்குவோர் உறுதி!
தருமபுர ஆதீனத்தின் பல்லக்கை சுமப்பது எங்களின் சமய உரிமை அதனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று மடத்தில் பல்லக்கை சுமப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீன மடம் மிகவும் பழமை வாய்ந்தவை ஆகும். இங்கு நடைபெறும் பட்டின பிரவேசம் விழாவிற்கு கோட்டாட்சியர் திடீரென்று தடை விதித்தார். இந்த தடை விதிப்புக்கு பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்தது. தி.மு.க. அரசு ஆன்மீகத்தில் தலையிடக் கூடாது என்று பல்வேறு ஆதீன மடாதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். குருவை சிஷ்யர்கள் சுமப்பது என்ன தவறு என்ற கேள்வியையும் முன்வைத்தனர். இதனிடையே தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனத் திருடத்தை சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கின்ற 72 பேர் பரம்பரை, பரம்பரையாக பல்லக்கு சுமந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே பல்லக்கு தூக்கி வருகிறோம். இதனை சுமப்பது எங்களின் சமய உரிமை ஆகும். இதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். எங்களின் கருத்துக்களை கேட்காமல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source, Image Courtesy: Dinamalar