தி.மு.க. ஆட்சி அமைந்தால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதி அளித்ததை நம்பி பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் அக்கட்சிக்கு வாக்களித்தனர். தற்போது ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அரசு ஊழியர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமைச்சர்கள் கூறினர்.
இதனால் அரசு ஊழியர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஏன் இப்படி நம்ப வைத்து மோசம் செய்துவிட்டீர்களே என்று பல மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி கழகம் (கோவை மாவட்டம்) சார்பில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#திராவிடமாடல் என்பது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி வருவதே, வந்த பிறகு அனைவரையும் ஏமாற்றுவதே.
— Selva Kumar (@Selvakumar_IN) May 10, 2022
திமுக வந்தால் எங்களுக்கு நிச்சயம் "விடியல்" என கட்சிகாரனை விட அதிகமாக உழைத்த கூட்டம் இது. 😢 pic.twitter.com/pcBRmIr8WR
கோவை டவுன்ஹால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செய்தித்தொடர்பு செயலாளர் மைக்கேல் ராஜ் பேசுகையில், சட்டசபை தேர்தல் சமயத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். இதுவரையில் நிறைவேற்றவில்லை. அதனை நம்பி தி.மு.க. வெற்றிபெற தோள் கொடுத்தோம். ஒரு வருடம் நிறைவு செய்தும் நிறைவேற்றாத தி.மு.க. அரசு பச்சை துரோகம் இழைத்து விட்டது என்றார்.
Source, Image Courtesy: Twiter