பழனி முருகன் கோயிலில் மரகத லிங்கம் கடத்த முயற்சி? இந்து அமைப்பு பரபரப்பு புகார்!
பழனி முருகன் கோயிலில் உள்ள பச்சை மரகத லிங்கத்தை கடத்துவதற்கு முயற்சி செய்வதாகவும், அதனை பாதுகாக்க 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராமரவிக்குமார் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி தினத்தில் புவனேஸ்வரி அம்மனுக்கும், போகர் பூஜித்த மரகத சிவலிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி மே 28ல் மரகத லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அன்றைய இரவு போகர் ஜீவசமாதி கோயில் அமைந்திருக்கும் பகுதியில் சில பணியாளர்கள், மரகதலிங்கம், புனவேஸ்வரி அம்மன் தெய்வ திருமேனிகளை பாதுகாப்பாக வைக்கக்கூடிய அறைகளின் கதவுகளை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி சுத்தியால் கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். எனவே கடத்தல் கும்பலுக்கு ஏதுவாக இவர்கள் வழிவகை உருவாக்கி கொடுத்திருக்கலாம் என தெரிகிறது. இதற்கு முன்னர் முருகன் சிலையை திருட முயற்சி செய்துள்ளனர். தங்கச்சிலைகள் ஊழல்கள் என தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்று வருகிறது. எனவே உடனடியாக கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar