கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே, தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் மகன் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர். கொலை, கொள்ளை, சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
இதன் வரிசையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதி, 'செம்பனங்கூர்' கிராமத்தைச் சேர்ந்தவர்தான் 'மாயாவதி தவபாலன்'. இவர் அப்பகுதி தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ஆவார். இவரது மகன் 'தமிழழகன்' ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.
தமிழழகன் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதற்கிடையில் தமிழழகன் அப்பெண்னிடம் பாலியல் ரீதியாக உறவும் வைத்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு தமிழழகனிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு தமிழழகன் மறுக்கவே, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தமிழழகன் மீது உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் தமிழழகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
"இச் சம்பவம் குறித்து பெரும்பான்மையான தமிழக ஊடங்கங்கள் செய்தி வெளியிடாதது, அவ் ஊடகங்களின் உண்மை முகத்தை காட்டுகிறது" என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.