பட்டியலின மக்களுக்கு திமுக செய்த துரோகம்: ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் அண்ணாமலை!
"என் மண் என் மக்கள்" நடை பயணத்தின் 5வது நாளான ஆகஸ்ட் 1ல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அண்ணாமலை பயணம் மேற்கொண்டார். மண்பாண்ட கூட்டுறவு சொசைட்டியில் தொழிலாளர்களின் குறைகளை அண்ணாமலை கேட்டறிந்தார். மானாமதுரையில் புகழ்பெற்ற கடம் இசைக்கருவியை இசைத்துப் பார்த்தார். அதேபோல் மண்பாண்ட தொழில் கூடத்தில், அண்ணாமலை மண்பாண்டங்களை செய்து பார்த்தார்.
திமுகவினர் யாத்திரை நடத்தினால் என் மகன் என் பேரன் என்று சொல்லி இருப்பார்கள். இதை நாம் கடந்த 27 மாதங்களாக பார்த்து கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இத்தனை ஆண்டு காலம் பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக, மத்திய அரசு ஒதுக்கும் பெரும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பிய ஊழல் திமுக அரசு, தற்போது, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்ற முயற்சிக்கிறது. பட்டியல் சமூக மக்களுக்கான நிதியை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. எப்படியும் யாராவது எதிர்த்து வழக்கு தொடுப்பார்கள், அதை வைத்தே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் கைவிட்டு விடலாம் என்ற எண்ணத்தோடு திமுக செயல்படுகிறது.
இது வரை இல்லாத அளவில், தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கியிருக்கும் பிரதமர் மோடி வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக தமிழகமும் இம்முறை பெரும்பங்கு வகிக்கும் என கூறினார்.