இனி நீட் தேர்வு மரணத்திற்கு தி.மு.க தான் பொறுப்பு.. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..

Update: 2023-08-16 05:47 GMT

என் மண் என் மக்கள் பாதயாத்திரையை 16வது நாளாக மேற்கொண்ட அண்ணாமலை திருச்செந்தூரை சென்றடைந்தார். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளை சந்தித்து, கேடயம் வழங்கி கௌரவப்படுத்தினார். பின்னர் தற்பொழுது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வில் தோல்வி காரணமாக மாணவரும் அவருடைய தந்தை உயிர் இழந்ததும் பெரும் சோதனை சோகத்தை ஏற்படுத்துகிறது.


இது பற்றி அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது, நீட் தேர்வின் தோல்வியால் மாணவரும் அவரது தந்தையும் உயிரிழந்தப்பது வருத்தமளிக்கிறது என்றார். நீட் தேர்வில் ஏராளமான ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகிறார்கள் என்றும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும், குறிப்பாக நீர் தேர்வை வைத்து திமுக மோசமான அரசியலை ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.


நீட் தேர்வினை நீட்டாக பாருங்கள் என்றும் எந்த கல்விக்கு தகுதித்தேர்வு இல்லை என்றும் கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வினால் தமிழகத்தில் இன்னுமொரு உயிர் போனால் அதற்கு திமுகதான் காரணம் என்று குற்றம்சாட்டினார். விரைவில் யாத்திரை தொடரும் தமிழகத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் இருக்கிறார்கள் பெரும்பான்மையான மக்கள் தற்போது இருக்கும் அரசின் உண்மை நிலையை புரிய தொடங்கி விட்டார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:  News

Tags:    

Similar News