அண்ணாமலைக்கு உதவ அரசு வேலையை ராஜினாமா செய்கிறேன்: காவலரின் அறிவிப்பால் அனல் பறக்கும் அரசியல் களம்!
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திக் காவலராக பணியாற்றுகிறார்.
ராமநாதபுரம் பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசனை சந்தித்த அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறினார்.
சமூகமும், நாடும் வளர்ச்சி அடைய வேண்டும். இதுகுறித்து சமூக ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.அந்த அறிக்கையை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்க உள்ளேன்.
அடுத்த முதல்வர் அண்ணாமலை தான். அவருக்கு உதவ போலீஸ் தேவை. அதற்காகத்தான் பதவியை ராஜினாமா செய்கிறேன். போலீஸ் வேலையில் மன அழுத்தம் இல்லை. 13 ஆண்டுகளாக நான் நேசித்து பணிபுரிந்தேன்.
மக்கள் சேவைக்காக காவல் பணியை ஒத்தி வைத்துள்ளேன். இன்று சமுதாயத்தில் எந்த கட்சி நன்றாக உள்ளது என்றால் அது பா.ஜ.கதான். அக்கட்சியில் இணைய உள்ளேன்.
தி.மு.க., அரசு குறித்து எனது ஆய்வில் தெரிய வரும். எனது சர்வே மூலம் இந்த அரசே வேண்டாம், என மக்கள் கூறுவார்கள்.லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வேண்டும், என மக்கள் கூற வாய்ப்புள்ளது.
நான் ராஜினாமா கடிதம் கொடுக்க சென்ற போது, எஸ்.பி அலுவலகத்தில் இல்லை. முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன், என்றார்.
Input From: Dinamalar