முதல்வரின் பிறப்பை இழிவாக பேசிவிட்டு பிதற்றிக்கொண்டிருக்கும் ராசா! அதிகாரம் கையில் இல்லாமலே ஆணவம் தலைவிரித்து ஆடுகிறது!
நான் பேசிய சில வார்த்தைகளை ஒட்டி வெட்டி சமூக வலைதளங்களில் பரப்புவதாக அறிகிறேன். அதற்கு நான் பொறுப்பல்ல என்று ஆ.ராசா தனது பேச்சுக்குத் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ராசா பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முதல்வரின் பிறப்பு குறித்து அதில் ஒப்பீடு என்பதாகப் பேசியது பலத்த கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக ஆ.ராசா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,
என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியும், இன்று அவர் பெற்றிருக்கிற இடத்தையும், அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்த முறையையும், பெற்றிருக்கிற இடத்தையும் ஒப்பிட்டு நான் பேசிய சில வார்த்தைகளைக் கோர்த்து வெட்டியும், ஒட்டியும் சமூக வலைதளங்களில் வந்துள்ளதாக அறிகிறேன்.
அது முற்றிலும் தவறானது. நான் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட பிறப்பையோ, அவருடைய தனிப்பட்ட புகழையோ களங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டிய எண்ணமில்லை. அரசியல் ஆளுமையை ஒப்பிட்டேன். ஸ்டாலின் முறையாக, படிப்படியாக வளர்ந்து தலைவராகியுள்ளார். குறுக்கு வழியில் நாங்கள் வரவில்லை என்று குறிப்பிட்டேன்.
எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் வந்தவர் என்பதற்காக அப்படி ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது. அதை ஒட்டியும், வெட்டியும் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பதாக அறிகிறேன்.
அப்படிப்பட்ட உள்நோக்கத்துடன் எதையும் நான் குறிப்பிடவில்லை. இரண்டு பேரின் அரசியல் ஆளுமையைக் குறிப்பிட அப்படி ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது. அதைத் தவறாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று ஆணவமாக பேசியுள்ளார்.