மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதில் சிக்கல்.. இனி இதை நீங்கள் பண்ண முடியாது..

Update: 2023-07-18 03:00 GMT

அரசு வழங்கும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு விளங்கி வருகிறது. ரேஷன் கார்டு மூலம் தான் நீங்கள் அந்த குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எத்தனை உறுப்பினர்கள் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். அடிப்படை ஆதாரமாகவும் இந்த ரேஷன் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ரேஷன் கார்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர் எவரேனும் திருமணமானால் அவர்கள் தனியாக கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வேறொரு குடும்பமாக கருதி அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.


மேலும் பழைய ரேஷன் கார்டில் அவர் பெயர் நீக்கம் செய்யப்படும் இதுதான் நடைமுறை. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கான ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், ரேஷன் அட்டைகளில் பெயர் நீக்கும் விண்ணப்பங்களை ஏற்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதன் மூலம் இனி நீங்கள் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப் போகிறீர்கள் என்றால் இந்த ஒரு சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கும் இனி புதிதாக ரேஷன் கார்டு கொடுக்கப்பட மாட்டாது மற்றும் பழைய கார்டுகளில் இருந்தும் உங்களுடைய பெயர் நீக்கப்படாது.

Input & Image courtesy: News l

Tags:    

Similar News