1093 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு: திருப்பம் தரும் புதிய தகவல் !

திருவண்ணாமலையில் சுமார் 1093 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Update: 2021-10-26 13:43 GMT

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கல்வெட்டுக்கள் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளதாகத் திகழ்கின்றன. அவை ஏதேனும் ஒரு செய்தீர்கள் வருங்கால மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக அன்றைய முன்னோர்கள் எழுதி வைத்ததுதான் நடுகல். அத்தகைய மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் பல முக்கியத் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகள் ஆய்வாளர்கள் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றது. எனவே அந்த வகையில் தற்போது 3 கல்வெட்டுகளும், சிற்பங்களும் பல அரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. இதை வெளிக்கொணரும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.


மேலும் இந்த ஆய்வை மேற்கொண்ட பாலமுருகன் அவர்கள் இதுபற்றி கூறுகையில், " தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, நண்பர்களுடன் இணைந்து திருவண்ணாமலை, திண்டிவனம் சாலையருகே அமைந்துள்ள வேடியப்பன் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம். அங்கு, நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகனின் கல்வெட்டு, அதன் எதிரே உள்ள சிலையில் ஒருவரி கல்வெட்டு என மொத்தம் 3 கல்வெட்டுகள் இருப்பதை முதலில் கண்டறிந்தோம். மேலும் இந்த நடுகல்லின் பின்புறமாக இருந்த கல்வெட்டு 1093 ஆண்டுகள் பழைமையானது. அதாவது, கி.பி.928-ம் ஆண்டில் பொறிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு இதுதான் பல்வேறு புதிய தகவல்கள் இருப்பதாகவும்" அவர் கூறினார். 


மேலும் இந்தக் கல்வெட்டில் மூலமாக, ஸ்ரீ பராந்தக இருமுடி சோழனுக்கும், செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவர்தான் "கண்டராதித்த சோழர்" என்றும் தெளிவாகப் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்தக் காலத்தில் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சிற்றரசன் வைரமேக வாணகோவரையரின் மகள் தான் செம்பியன் மாதேவி என்றும் இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.இதற்கு முன்பு திருக்கோவிலூர் அருகே கண்டெடுக்கப்பட்ட கி.பி. 947 ஆண்டு பழமையான கல்வெட்டில், முதலாம் பராந்தகன் மற்றும் சோழ மாதேவி என்பவரும் மகனாகப் பிறந்தவர் கண்டராதித்தர் என்று கூறுகிறது. இதன் மூலம் செம்பியன் மாதேவி என்ற பெயரும், சோழ மாதேவி என்ற பெயரும் ஒருவரை தான் குறிக்கிறது என்பது தெளிவாகிறது. பராந்தக சோழருக்கு இருமுடி சோழன் என்ற பட்டம் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறியப்படுகிறது. இந்தக் கல்வெட்டுகளை அரசு ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வு மேற்கொண்ட தரப்பினர் கூறி வருகிறார்கள். 

Input & Image courtesy:Vikatan



Tags:    

Similar News