ஏகபோகமாக நடைபெறும் சட்ட விரோத மதப் பிரச்சாரம்! பல்லாவரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

Update: 2022-01-07 13:23 GMT

பல்லாவரம் ரயில் நிலையம்,  படிக்கட்டு பகுதியில்  மாதா கெபி சிலுவை வரையப்பட்டுள்ளதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் பல பொது இடங்களை குறிவைத்து, சட்ட விரோத மதமாற்ற கும்பல் தங்களது அடையாளங்களை பொதுமக்கள் மத்தியில் புகுத்தி வருகின்றனர்.


பொது இடங்களில் சட்டவிரோதமாக ஜெபக்கூடம் நிறுவுவது, இந்து கோவில்களுக்கு அருகே ஜெபக் கூடம் அமைப்பது, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இலவசமாக பைபிள் விநியோகிப்பது என அனைத்து திசைகளிலும் சட்டவிரோதமாக மதமாற்ற செயல் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல்லாவரம் ரயில் நிலையத்தில் நடந்த  இச்சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


பல்லாவரம் ரயில் நிலையம் என்பது பொதுமக்கள் பெருமளவு  சென்றுவரும் பகுதியாகும். அந்த ரயில் நிலைய படிக்கட்டு அருகில்  மாதா கெபி சிலுவை வரையப்பட்டிருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் அறிந்த இந்து முன்னணியினர் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்ததன்  விளைவு அந்த சிலுவை அகற்றப்பட்டது.


இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : பல்லாவரம் ரயில் நிலையம் படிக்கட்டில் மாதா கெபி சிலுவை வைக்கப்பட்டுள்ளது பல்லாவரம் நிலை அதிகாரியிடம் புகார் அளித்ததின் பேரில் மாதா கெபி சிலுவை அகற்றப்பட்டது. 

Similar News