கிருஷ்ணகிரி: பள்ளிக்கூடம் எதிரே ஜெபக்கூட்டம் நடத்தி கட்டாய மதமாற்றம்! இந்துமுன்னணி குற்றச்சாட்டு!

Update: 2022-03-11 06:48 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தனியார் பள்ளிக்கூடம் எதிரில் ஜெபக்கூடம் நிறுவி கட்டாய மதமாற்ற செயல்கள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக பொது இடங்களில் சட்டவிரோத ஜெபக்கூடங்கள்  நிறுவி, இந்து மக்களை குறிவைத்து கட்டாய மதமாற்ற செயல்கள் நடந்து வருவதாக  குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்,


கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டியில்  தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இப் பள்ளிக்கூடத்திற்கு எதிரே கட்டிடம் ஒன்றை வாடகைக்கு   எடுத்து, சட்டவிரோதமாக ஞாயிறுதோறும் கிறிஸ்தவர்களால் ஜெபக்கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அந்த ஜெபக்கூட்டங்களில், இந்து மக்களை ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அறிந்த அப்பகுதி வாசிகளான  திருமுருகன், பழனி மற்றும் மதியழகன் ஆகியோர், இதை கண்டித்து  ஜெப கூட்டம் நடத்துபவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்க்கு அந்த மூவரை ஜெபக்கூட்டம் நடத்துபவர்கள்  தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இச் சம்பவங்களால் அப்பகுதியில் இரண்டு சமுதாயத்திற்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இதை  அறிந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார், இதுகுறித்து நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதில் "கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தின் படியும்   இந்திய தண்டனை சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" உஎன்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Dinamalar

Similar News