உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொல்வோம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகியின் பேச்சால் அதிர்ச்சி!

Update: 2022-03-18 11:56 GMT

பள்ளிகளில் அனைவரும் சீருடையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஹிஜாப் அணிய கூடாது என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து கர்நாடகாவில் முஸ்லிம் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு நிர்வாகி ஒருவர் பேசியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹிஜாப் அணிய தடை விதித்த நீதிபதிகளை கொலை செய்வோம் எனவும் இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் காரணம் என பேசப்படுகிறது. இது போன்ற கொலை வெறியோடு பேசும் அமைப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அனைத்து மதத்தினரும் சமம் என்பதால் அனைவருமே சீருடையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு. ஏற்ற தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருப்பதற்காகத்தான் சீருடைகள் வழங்கப்படுகிறது. ஆனால் இதனை சில அமைப்புகள் தவறாக எடுத்துக்கொண்டு நீதீபதிகளை கொலை செய்வோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News