அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியும், அதற்கான வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் ஆகும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்கின்ற பெருமையை கொண்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டு சாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர் 1991 மற்றும் 2008ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதாவது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதிகளில் ஒன்று. ஆனால் கும்பாபிஷேகம் முடிந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. கட்டுமான பணிகள் சேமடைந்து வருவதால், கோபுரங்கள் பொலிவிழந்துள்ளது. இதனை பார்த்து பக்தர்கள் கடுமையான வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விரைந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar