ஆளுநரை எதிர்த்து தி.மு.க வைத்த டிஜிட்டல் பேனர்.. ஒரே நாளில் எடுக்க வைத்து மாஸ் காட்டிய பா.ஜ.கவினர்..

Update: 2023-08-03 06:39 GMT

கடந்த சனிக்கிழமை ஜலகண்டபுரம் பேரூராட்சியில் திமுக சார்பில் தமிழக ஆளுநரை எதிர்த்து விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டது. இதற்கு சேலம் மாவட்ட பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்கள். கண்டனம் தெரிவித்துத்தோடு மட்டுமல்லாமல் அதில் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையும் எடுத்து இருந்தார்கள். அதன் பேரில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சேலம் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் நித்யகலா மாவட்ட செயலாளர் ஐயப்பரஜு மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்குமார் மற்றும் ஒன்றிய தலைவர் சீனிவாசன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இணைந்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.


அதன் பேரில் ஜலகண்டபுரதில் அந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. ஜலகண்டபுரம் செயல் அலுவலர் அவர்களிடமும் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுகவிற்கு மட்டும்தான் இத்தகைய டிஜிட்டல் பேனர்களை வைப்பதற்கான உரிமையை காவல் நிலையம் வழங்கி இருக்கிறதா? அப்படி வழங்கியிருந்தால் திமுக டிஜிட்டல் பேனர்களை வைத்து இடத்தில் பாஜகவின் சார்பில் டிஜிட்டல் பேனர்களை வைப்பதற்கும் அனுமதி தாருங்கள், இல்லை என்றால் திமுக வைத்தல் டிஜிட்டல் பேனரை அகற்றுங்கள் என்றும் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.


கடைசியில் காவல்துறை திமுக வைத்த பேனரை அங்கிருந்து அகற்றி இருக்கிறது. குறிப்பாக திமுக வைத்த ஒரே நாளில் உரிய நடவடிக்கை பாஜகவின் சார்பில் எடுக்கப்பட்டு தற்பொழுது மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல கடந்த 9 ஆண்டுகளாக ஊழல் அற்ற ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவரைப் பற்றி தவறுதலாக வைக்கப்பட்ட டிஜிட்டல் பதாகைகளுக்கு திமுக மன்னிப்பு கூற வேண்டும் என்றும் கேட்டு உள்ளார்கள்.

Tags:    

Similar News