தேனியில் 200 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பட்டா! 9 அரசு அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு!

தேனியில் அரசுக்கு சொந்தமான சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை தனிநபர்களுக்கு முறைகேடாக பட்டா மாற்றிக்கொடுத்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் 9 பேர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது.

Update: 2021-12-25 13:23 GMT

தேனியில் அரசுக்கு சொந்தமான சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை தனிநபர்களுக்கு முறைகேடாக பட்டா மாற்றிக்கொடுத்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் 9 பேர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பல ஆயிரம் கணக்கில் உள்ளது. அதனை தனிநபர்களுக்கு குத்தகைக்கு மட்டுமே விடப்பட்டிருக்கும் நிலையில், அந்த நிலத்தை அதிகாரிகள் துணையுடன் பட்டா போட்டுக்கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.

அதே போன்று தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலங்கள் முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், சர்வேயர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News