ஜனவரி 3ம் தேதி முதல் நேரடி விசாரணை: உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற ஜனவரி 3ம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-12-28 12:41 GMT

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற ஜனவரி 3ம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நீதிமன்றங்களில் காணொலி வாயிலாக மட்டுமே வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் கொரோனா தொற்று குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. அது மட்டுமின்றி 5 கோடி பேருக்கு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜனவரி 3ம் தேதி முதல் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கப்படும் முறைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News